பணி மாறுதல் கேட்ட ஆசிரியர்: சிறை தண்டனை வழங்கிய முதல்வர் 

தொலைதூர பகுதி ஒன்றில் இருந்து பணி மாறுதல் கேட்ட ஆசிரியர் ஒருவர் தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஜார்கண்ட் மாநில முதல்வர் அவருக்கு சிறை தண்டனை வழங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பணி மாறுதல் கேட்ட ஆசிரியர்: சிறை தண்டனை வழங்கிய முதல்வர் 

டேராடூன்: தொலைதூர பகுதி ஒன்றில் இருந்து பணி மாறுதல் கேட்ட ஆசிரியர் ஒருவர் தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஜார்கண்ட் மாநில முதல்வர் அவருக்கு சிறை தண்டனை வழங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் வியாழன் அன்று 'ஜனதா தர்பார் என்னும் பொதுமக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநில முதல்வர் திரிவேந்திர ராவத் கலந்து கொண்டார். இதில் தொலைதூர பிரதேசம் ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றும் உத்தரா பகுகுணா என்னும் ஆசிரியையும் கலந்து கொண்டார்.

அவர் முதல்வர் ராவத்திடம் தான் கடந்த 25 வருடங்களாக இத்தகைய தொலைதூர பி[ரதேசங்களிலேயே பணியமர்த்தப்படுவதாகக் கூறி, தனக்கு பணிமாறுதல் கோரினார். ஆனால் முதல்வர் அவரது கோரிக்கையினை நிராகரித்தார். இதனால் ஆத்திரமடைந்த உத்தரா முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அபொழுது அவர் சில கடுமையான வார்தைகளைப் பயன்படுத்தியாகக் கூறப்படுகிறது.

இதனால் எரிச்சலடைந்த முதல்வர் ராவத் அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யுமாறும், சிறையில் அடைக்குமாறும் உத்தரவிட்டார். அதன்படி அவர் கைது செய்யப்பட்டார்.. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

பின்னர் அவர் வியாழன் மாலை விடுவிக்கப்பட்டதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com