உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?

உலகின் சக்திவாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு நான்காவது இடம் பெற்றுள்ளது.
உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?

புதுதில்லி: உலகின் சக்திவாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா  நான்காவது இடம் பெற்றுள்ளது.

உலகளவில் 133 நாடுகளின் ராணுவ வளங்கள், இயற்கை வளங்கள், தொழில் மற்றும் புவிசார் அம்சங்கள், மனிதசக்தி ஆகிய 50 முக்கிய அம்சங்களின் அடிப்படையில் உலகின் சக்தி வாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு "2017 குளோபல் ஃபயர் பவர் இன்டெக்ஸ்" என்ற பெயரில்  வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் ராணுவ வலிமை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவற்றிற்கு அடுத்ததாக நான்காவது இடம் பிடித்துள்ளது.  இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 13-வது இடத்தில் உள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் பிரான்ஸ், பிரட்டன், ஜப்பான், துருக்கி, ஜெர்மனி, எகிப்து ஆகிய நாடுகள் உள்ளன. அமெரிக்காவை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் வடகொரியா முதல் பத்து இடங்களில் கூட வராதது அந்நாட்டின் ராணுவத்தின் நிலையை பிரதிபலிக்கிறது. 

வரும் ஆண்டுகளில், ரஷ்யாவைப் பின்னுக்கு தள்ளி, சீனா இரண்டாம் இடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. சீனா, பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவின் ராணுவங்களுக்கு இடையிலான ஒப்பீட்டை வழங்கக்கூடிய விவரங்களை இந்த அறிக்கை அளித்துள்ளது. 

சக்திவாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொண்டாலும், கடந்த ஆண்டு 15-வது இடம் பிடித்த பாகிஸ்தான், தற்போது 13-வது இடத்தை பிடித்திருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  

ரஷ்யாவை விட அதிகளவு போர் விமானங்களும், போர்க்கப்பல்களும், சீனாவிடம் உள்ளன. ராணுவத்திற்காக அதிக நிதி செலவுகளை செய்து, தொழில்நுட்பத்துடன் நவீனப்படுத்தும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது.

இந்திய ராணுவம் 13,62,500 ராணுவ வீரர்களை வைத்துள்ளது என்றாலும் சீன ராணுவம் இந்தியாவை விட 600,000க்கும் அதிகமான ராணுவ வீரர்களை கொண்டுள்ளது.  

இந்தியாவிற்கு பெரிய பிரச்னையாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் எல்லைப் பிரச்னைகள் இருந்து வருகின்றன. அதற்காக பெரும் பகுதி ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்திய விமானப்படையில் 2102 விமானங்களும், 676 ​​போர் விமானங்களும், 809 தாக்குதல் விமானங்களும், தாக்குதல் போர் விமானங்கள் 785-ம் உள்ளன. இந்திய இராணுவத்தில் மொத்தம் 4426 போர் டாங்கிகள், 6704 கவச வாகனங்கள், 290 பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் 7414 இழுவை பீரங்கி துப்பாக்கிகள் உள்ளன.

ஆனால், சீனாவிடம் 1200 தாக்குதல் போர் விமானங்களும், 2955 விமானப்படை விமானங்களும், 2671 போர் விமானங்களும், 1385 தாக்குதல் விமானங்களும் உள்ளன. 

பாகிஸ்தானிடம் மொத்தம் 2924 போர் டாங்கிகள், 2828 கவச வாகனங்கள், 426 பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் 3278 இழுவை பீரங்கி துப்பாக்கிகள் உள்ளன. 

6457 டாங்கிகள், 4788 கவச வாகனங்கள், 1710 இழுவை பீரங்கிக் துப்பாக்கிகள் மற்றும் 6246 சுடும் துப்பாக்கிகள் உள்ளன. பாகிஸ்தானுக்கும் மேலான ராணுவ வலிமை இந்தியாவிடம் உள்ளது.

சீன கடற்படைக்கு எதிராக இந்திய கடற்படை மூன்று விமானக் கப்பல்கள் வைத்திருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவிடம் 11 கப்பல்கள் மற்றும் 15 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. சீனாவிடம் 35 டிராக்டர்கள் மற்றும் 68 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. இந்தியாவின் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டம் 51 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். 

பாகிஸ்தானிடம் ஒரு விமானம் டாங்கிகள் கிடையாது மற்றும் அதன் கடற்படை சக்தியானது 10 போர் பிரேக்கட்களையும் எட்டு நீர்மூழ்கிகளையும் கொண்டுள்ளது. 

இந்த ஆய்வில் உலக நாடுகளின் அணுசக்தி எரிபொருள்கள், அணு ஆயுதங்கள் கையிருப்புகளை இந்த அறிக்கையில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு சீனா தனது ராணுவ நிதிநிலையில் மேலும் 8.1 சதவிகிதம் உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com