பேஸ்புக்கில் கமெண்ட்டுக்கு பதில் இல்லை: பெண்ணின் மீது ஆசிட் வீசிய இளைஞன்! 

பேஸ்புக்கில் தான் இட்ட கமெண்ட்டுக்கு பதில் சொல்லவில்லை என்பதால் பெண் ஒருவர் மீது இளைஞன்  ஆசிட் வீசிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பேஸ்புக்கில் கமெண்ட்டுக்கு பதில் இல்லை: பெண்ணின் மீது ஆசிட் வீசிய இளைஞன்! 

பாட்னா: பேஸ்புக்கில் தான் இட்ட கமெண்ட்டுக்கு பதில் சொல்லவில்லை என்பதால் பெண் ஒருவர் மீது இளைஞன்  ஆசிட் வீசிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பீகாரின் தலைநகர் பாட்னாவில் காஜ்புரா பகுதியைச் சேர்ந்தவர் சோனு குமார். இவர் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பெண் ஒருவருடன் நட்பிலிருந்துள்ளார். அந்த பெண்ணின் நிலைத்தகவல்களில் (ஸ்டேட்டஸ்) இவர் கமெண்டுகள் இட்டால் அந்தப் பெண் பதிலளித்து வந்துளார்.

ஆனால் சமீப காலமாக அந்தப் பெண் இவருக்கு சரியாகி பதிலளிப்பதை நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சோனு திங்களன்று மாலை, நகரின் முக்கியமான பகுதியான ஜிபிஓ ரவுண்டானா அருகே, அந்தப் பெண் தனது மாமாவுடன் நடந்து வரும் பொழுது மோட்டார் சைக்கிள் ஒன்றில் நண்பருடன் வந்து வழி மறுத்துள்ளார்.

இவரைப் பார்த்து நின்ற அந்தப் பெண்ணின் மீது சோனு ஆசிட்டை வீசியுள்ளார். தடுக்க முயன்ற அவரது மாமா மீதும் ஆசிட் தெளித்துள்ளது. இருவரின் அலறலைக் கேட்டு கூட்டம் கூடத் தூங்கியதும், அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.

பின்னர் அவர்களிருவரும் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வழக்குப்  பதிந்து விசாரணை செய்த போலீசார், பாட்னாவில் ரகசிய இடத்தில் ஒளிந்திருந்த சோனுவைக் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த தகவலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) லலன் மோகன் பிரசாத் தெரிவித்துள்ளார்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com