அயோத்தியை சிரியாவுடன் ஒப்பிடுவதா?: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு கண்டனம் தெரிவித்த ஒவைசி! 

அயோத்தி விவகாரத்துடன் சிரியாவை ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஒப்பிடுவது மிகுந்த கண்டனத்துக்குரியது என்று ஏ.ஐஎம்.ஐ.எம் கட்சி நிறுவனர் அக்பருதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
அயோத்தியை சிரியாவுடன் ஒப்பிடுவதா?: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு கண்டனம் தெரிவித்த ஒவைசி! 

ஹைதராபாத்: அயோத்தி விவகாரத்துடன் சிரியாவை ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஒப்பிடுவது மிகுந்த கண்டனத்துக்குரியது என்று ஏ.ஐஎம்.ஐ.எம் கட்சி நிறுவனர் அக்பருதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பது தொடர்பான பிரச்சினையில் இந்துக்களுக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சியில், 'வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சமீபகாலமாக ஈடுபட்டுள்ளார். அவர் சமீபத்தில் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நமது நாட்டில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய விஷயமாக, ராமர் கோயில் பிரச்சினை இருந்து வருகிறது. இந்தப் பிரச்சினையை விரைவாகத் தீர்க்காவிட்டால், இந்தியா வரும் காலத்தில் சிரியாவாக மாறிவிடும். சிரியா விவகாரத்தின் மூலம் நமக்குத் தெரிவதெல்லாம் முஸ்லிம்கள் அயோத்தி விவகாரத்தில் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும் என்பதே ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். இதற்கு அயோத்தி விவகாரத்துடன் சிரியாவை ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஒப்பிடுவது மிகுந்த கண்டனத்துக்குரியது என்று ஏ.ஐஎம்.ஐ.எம் கட்சி நிறுவனர் அக்பருதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

'ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தன்னை மிகவும் பெரியவர் என்று நினைத்துக் கொள்கிறார். அனைவரும் அவரது பேச்சை கேட்டுதான் நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். அவர் இந்த விவகாரத்தில் நடுவராகச் செயல்படவில்லை. அயோத்தி விவகாரத்துடன் சிரியாவை அவர் ஒப்பிடுவது மிகுந்த கண்டனத்துக்குரியது.

இவ்வாறு ஓவைசி தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com