ஆருஷி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு

ஆருஷி கொலை வழக்கில் இருந்து அவரது பெற்றோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீடு செய்யப்பட்டது. விரைவில் அந்த மனு,

ஆருஷி கொலை வழக்கில் இருந்து அவரது பெற்றோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீடு செய்யப்பட்டது. விரைவில் அந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பரிசீலனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் 2008-ஆம் ஆண்டில் சிறுமி ஆருஷி (14), அவரது வீட்டு வேலைக்காரர் ஹேமராஜ் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதில், ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார், தாய் நூபுர் தல்வார் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. பல் மருத்துவர்களான இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அலாகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த டிசம்பர் மாதம் ராஜேஷ், நூபுர் தம்பதியை விடுவித்து உத்தரவிட்டது. அவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவர்களது விடுதலையை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. விரைவில் அதன் மீதான விசாரணை தொடங்கும் எனத் தெரிகிறது. முன்னதாக ஆருஷியின் பெற்றோரை விடுவித்ததற்கு எதிராக ஹேமராஜின் மனைவியும் மேல்முறையீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com