ஆர்எஸ்எஸ் பிரதிநிதி சபை கூட்டம் நாகபுரியில் இன்று தொடக்கம்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்நிலைக் குழுவான அகில பாரதிய பிரதிநிதி சபைக் கூட்டம் மகாராஷ்டிர மாநிலம் நாகபுரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்நிலைக் குழுவான அகில பாரதிய பிரதிநிதி சபைக் கூட்டம் மகாராஷ்டிர மாநிலம் நாகபுரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
வரும் 11-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைப்பின் புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இப்போது, பொதுச் செயலாளராக பையாஜி ஜோஷி உள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அடுத்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைமை மாற்றம் குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.
நாகபுரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் மன்மோகன் வைத்யா, 'பொதுச் செயலாளரை ஆர்எஸ்எஸ் பிரதிநிதிகள் தேர்வு செய்வார்கள். இந்தக் கூட்டத்தில் சுமார் 1500 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அமைப்பின் செயல்பாடுகள், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுப்பதே இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்றார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலைவர்கள் சிலை உடைக்கப்படுவது குறித்த கேள்விக்கு, 'இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் துரதிருஷ்டவமானவை' என்று வைத்யா பதிலளித்தார்.
முதல் நாள் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பொதுச் செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. அமித் ஷா, ஆர்எஸ்எஸ் பிரதிநிதிகள் சபையில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com