திரிபுரா முதல்வராக விப்லப் தேவ் இன்று பதவியேற்பு

திரிபுரா மாநில முதல்வராக பாஜகவின் விப்லப் தேவ் (48) வெள்ளிக்கிழமை பதவியேற்க உள்ளார்.
திரிபுரா முதல்வராக விப்லப் தேவ் இன்று பதவியேற்பு

திரிபுரா மாநில முதல்வராக பாஜகவின் விப்லப் தேவ் (48) வெள்ளிக்கிழமை பதவியேற்க உள்ளார்.
திரிபுராவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 35 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக பாஜக அமோக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு அந்த மாநில ஆளுநர் ததாகத ராயிடம் விப்லப் தேவ் கோரினார். அதைத் தொடர்ந்து, அவரை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
துணை முதல்வராக ஜிஷ்ணு தேவ் வர்மா பதவியேற்கிறார்.
அவர் இன்னும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, வடகிழக்கு பிராந்தியங்களில் பாஜக ஆளும் 3 மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர் என்று பாஜகவின் செய்தித்தொடர்பாளர் மிருணாள் கன்டி தேவ் தெரிவித்தார்.
திரிபுரா உள்நாட்டு மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைத்து பல்வேறு வியூகங்களை வகுத்த பாஜக, 25 ஆண்டுகளாக தனது கட்டுப்பாட்டில் திரிபுராவை வைத்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தேர்தலில் வீழ்த்தியது. 60 தொகுதிகளைக் கொண்ட சட்டப் பேரவையில் திரிபுரா உள்நாட்டு மக்கள் முன்னணி கட்சி 8 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 16 இடங்களில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் திடீரென காலமாகி விட்டதால் ஒரு தொகுதியில் மட்டும் தேர்தல் வரும் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் ஜிஷ்ணு போட்டியிடவுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com