பணியாளர் தேர்வில் முறைகேடு: 12 பேர் மீது வழக்குப்பதிவு

முறைகேடான நடவடிக்கைகள் மூலமாக பணியில் சேர்ந்ததாக வருமான வரித் துறை எழுத்தர்கள் 12 பேர் மீது சிபிஐ-யின் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முறைகேடான நடவடிக்கைகள் மூலமாக பணியில் சேர்ந்ததாக வருமான வரித் துறை எழுத்தர்கள் 12 பேர் மீது சிபிஐ-யின் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
வருமான வரித் துறையின் எழுத்தர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 2012 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது. எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்கள் அப்பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், அத்தேர்வில் 12 பேர் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் இருந்த கையொப்பத்துக்கும், பணியமர்த்தப்பட்டவர்களின் கையொப்பத்துக்கும் வேறுபாடு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நாகபுரியில் வருமான வரித் துறை அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றும் 11 பேர் மீதும், ராஜஸ்தானில் பணியாற்றும் ஒருவர் மீதும் சிபிஐ லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அனுமதிச் சீட்டில் உள்ள கையொப்ப முரண்பாடுகளை ஆய்வு செய்யாததற்காக அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் சிலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com