மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க மாநிலக் கட்சிகள் அணிதிரள வேண்டும்: மம்தா வலியுறுத்தல்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைதத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க அனைத்து மாநிலக் கட்சிகளும் அணிதிரள வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க மாநிலக் கட்சிகள் அணிதிரள வேண்டும்: மம்தா வலியுறுத்தல்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைதத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க அனைத்து மாநிலக் கட்சிகளும் அணிதிரள வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு,மேற்கு வங்க ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கொல்கத்தாவில் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்று மம்தா பேசியது:
மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க அனைத்து மாநிலக் கட்சிகளும் அணிசேர வேண்டும். 
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எழுந்துள்ள புரட்சியின் ஓசையை அவர்களால் (பாஜக) கேட்க முடியவில்லையா? ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகியவற்றில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளை அவர்களால் புரிந்து உணர முடியவில்லையா?
பாஜக கூட்டணி அரசில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறி விட்டது. 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும். மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிப்பது குறித்து கனவு காண்பதற்குப் பதிலாக அவர்கள் மத்தியில் உள்ள ஆட்சியைத் தங்களால் தக்க வைக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.
திரிபுரா தேர்தல் வெற்றிக்காக பாஜக மகிழ்ந்து விடக் கூடாது. ஏனெனில் அங்கு மத்தியப் படைகள் மற்றும் பணபலம் ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்தியதன் வாயிலாகவே வெற்றி கிடைத்துள்ளது. திரிபுராவில் ஆளுங்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கட்சி கடும் போட்டியை அளிக்காமல், காவிக் கட்சி (பாஜக) முன் சரணடைந்து விட்டது. எனினும், அங்கு 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து இடதுசாரிகள் 45 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளின் சிலைகளை சேதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. கொல்கத்தாவில் உள்ள ஜன சங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் சிலையை இடதுசாரி அமைப்பின் தொண்டர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் சிலர் மாநிலத்தின் புகழைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.
பாஜக இந்த மாநிலத்தில் கலவரங்களைத் தூண்ட முயற்சிக்கிறது. மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றார் மம்தா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com