மாநிலங்களவைத் தேர்தல்: பிரகாஷ் ஜாவடேகர் இன்று மனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தல்: பிரகாஷ் ஜாவடேகர் இன்று மனு தாக்கல்

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.
மகாராஷ்டிரத்தில் 6 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஜாவடேகர் இப்போது, மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அவரது பதவிக்காலம் ஏப்ரல் 2-ஆம் தேதி நிறைவடைகிறது.
'மும்பையில் உள்ள மாநில சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார்' என்று மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கேசவ் உபாத்யாய தெரிவித்தார். மொத்தம் 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர பேரவையில் பாஜகவுக்கு 122 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஒரு எம்.பி.யைத் தேர்வு செய்ய 42 எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவை என்ற நிலையில், கூடுதலாக ஒரு சில எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றால் பாஜக 3 எம்.பி.க்களைத் தேர்வு செய்ய முடியும். இப்போதைய நிலையில் ஒரு வேட்பாளரை மட்டும் பாஜக அறிவித்துள்ளது. விரைவில் மேலும் இரு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா ஒரு எம்.பி.யை மாநிலங்களவைக்கு அனுப்ப முடியும். காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை முடிவு செய்யவில்லை. மார்ச் 12-ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com