ராஜஸ்தான் உள்ளாட்சி இடைத் தேர்தல்: காங்கிரஸ் அமோக வெற்றி

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தானில் 6 மாவட்ட ஊராட்சிகளுக்கும், 20 பஞ்சாயத்து சமிதிகளுக்கும், 6 நகராட்சிகளுக்கும் கடந்த செவ்வாய்க்கிழமை இடைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் புதன்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி தேர்தல் நடைபெற்ற 6 மாவட்ட ஊராட்சிகளில் காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 20 பஞ்சாயத்து சமிதிகளில் 12 இடங்களிலும், 6 நகராட்சிகளில் 4 இடங்களிலுமம் அக்கட்சி வென்றுள்ளது. 
அண்மையில் அந்த மாநிலத்தில் நடைபெற்ற இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும், ஒரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாட்சி இடைத் தேர்தல் வெற்றி உற்சாகத்தை அளித்துள்ளது.
அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக ஒரு மாவட்ட ஊராட்சியிலும், 8 பஞ்சாயத்து சமிதிகளிலும், 2 நகராட்சிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
உள்ளாட்சி இடைத் தேர்தலில் தங்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறித்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், பிடிஐ செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் 'இது கட்சித் தொண்டர்களுக்கு கிடைத்துள்ள மற்றொரு வெற்றியாகும். 
கடந்த நான்கு ஆண்டுகளில் தனது மக்கள் விரோதக் கொள்கைகள் மூலம் ஆளும் பாஜக, மாநில மக்களவை சுரண்டி வந்தது. இந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இந்த ஆண்டு நடைபெறஉள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com