வங்கி மோசடியை விவாதிக்க அஞ்சுகிறது காங்கிரஸ்: அனந்த் குமார் விமர்சனம்

வங்கிக் கடன் மோசடி குறித்து விவாதிப்பதற்கு காங்கிரஸ் கட்சிதான் அஞ்சுகிறது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் கூறினார்.
வங்கி மோசடியை விவாதிக்க அஞ்சுகிறது காங்கிரஸ்: அனந்த் குமார் விமர்சனம்

வங்கிக் கடன் மோசடி குறித்து விவாதிப்பதற்கு காங்கிரஸ் கட்சிதான் அஞ்சுகிறது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் கூறினார்.
காங்கிரஸ், தெலுங்கு தேசம், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் முடங்கியது. இந்நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் அனந்த் குமார் கூறியதாவது: பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில் இருந்தே வங்கிக் கடன் மோசடி குறித்து விவாதிப்பதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தயாராக உள்ளன. இதை எங்களிடம் இருந்து எதிர்பார்க்காத காங்கிரஸ் கட்சி, தங்களது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொண்டு, வங்கி மோசடி குறித்து வெவ்வேறு 
விதிகளின் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என்று கூறி வருகிறது.
வங்கி மோசடிகள் அனைத்தும் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசின் ஆட்சிக்காலத்தில்தான் நடைபெற்றிருக்க வேண்டும். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,700 கோடி கடன் வாங்கிய நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர்களுக்குத் தொடர்பு உள்ளது.
முந்தைய ஆண்டுகளில் தாங்கள் செய்த முறைகேடுகள் அம்பலப்பட்டு விடும் என்ற அச்சத்தின் காரணமாக, விவாதத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி ஓடி ஒளிகிறது. மேலும், குஜராத், ஹிமாசலப் பிரதேசம், மேகாலயம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில் தோற்று விட்டதால், காங்கிரஸ் கட்சி உதவியின்றி பீதியடைந்து காணப்படுகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com