ஹாதியா திருமணம் செல்லும் : உச்சநீதிமன்றம்

கேரளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஹாதியாவின் திருமணம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தலைமையிலான அமர்வு இந்தத் தீர்ப்பை வியாழக்கிழமை
ஹாதியா திருமணம் செல்லும் : உச்சநீதிமன்றம்

கேரளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஹாதியாவின் திருமணம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தலைமையிலான அமர்வு இந்தத் தீர்ப்பை வியாழக்கிழமை அளித்தது.
ஹாதியாவும், ஷஃபின் ஜஹானும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பெண் வீட்டார் இந்தத் திருமணத்துக்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன், ஹிந்துப் பெண்ணான தனது மகள் கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டுவிட்டார் என்றும், ஷஃபின் ஜஹானுக்கு சிரியாவில் உள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்பிருப்பதாகவும் தந்தை கே.எம்.அசோகன் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பயங்கரவாத இயக்கத்தில் ஹாதியா சேர்க்கப்பட்டுவிடுவார் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனால் வழக்கு சூடுபிடித்தது. விசாரணையின் முடிவில் ஹாதியாவின் திருமணம் செல்லாது என்று கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியதுடன், ஹாதியாவை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஷஃபின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அசோகனும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வழக்கு தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. இந்த வழக்கை தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. என்ஐஏ விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், ஹாதியா சேலத்தில் படிப்பை தொடருவதற்கும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த வழக்கு தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் சில கேள்விகளை எழுப்பியது.
முன்னதாக, கணவருடன் செல்ல விரும்புவதாகவும், சொந்த விருப்பத்தின்பேரிலேயே முஸ்லிம் மதத்துக்கு மாறியதாகவும் உச்ச நீதிமன்றத்தில் ஹாதியா வாக்குமூலம் அளித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் என்ஐஏ விசாரணையைத் தொடரலாம் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் ஹாதியா திருமணத்தை செல்லாது என்ற கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நிராகரித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்று ஹாதியாவின் தந்தை அசோகன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com