ஆளுநர் மீது ஹெட்போனை எறிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்: தெலங்கானா சபாநாயகர் அதிரடி! 

சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் மீது ஹெட்போனை எறிந்த இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து தெலங்கானா சபா நாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆளுநர் மீது ஹெட்போனை எறிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்: தெலங்கானா சபாநாயகர் அதிரடி! 

ஹைதராபாத்: சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் மீது ஹெட்போனை எறிந்த இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து தெலங்கானா சபா நாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தெலங்கானா சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் திங்களன்று துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் நரசிம்மன் அங்கு உரையாற்ற வந்திருந்தார். அவர் தனது உரையினைத் துவங்கியதும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று கூச்சல் போட்டு அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்தனர்.

அதன் உச்சகட்டமாக காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏக்கள் கோமாத்ரி வெங்கட் ரெட்டி மற்றும் சம்பத்குமார் ஆகிய இருவரும் கையில் உள்ள பொருள்களை ஆளுநரை நோக்கி வீசினார்கள். அதிலும் வெங்கட் ரெட்டி தனது ஹெட்போனை ஆளுநரை நோக்கி வீசினார். அது பேரவைச் செயலர் ஸ்வாமி கவுட்டின் மீது பட்டு அவருக்கு கண்ணில் காயம் உண்டானது. 

இதன் தொடர்ச்சியாக ஆளுநர் நரசிம்மன் மீது ஹெட்போனை எறிந்த கோமாத்ரி வெங்கட் ரெட்டி மற்றும் சம்பத்குமார் ஆகிய இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை மொத்தமாக தகுதி நீக்கம் செய்து தெலங்கானா சபா நாயகர் மதுசூதன சாரி செவ்வாயன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதன் காரணமாக அவரகள் தற்போதைய சட்டப்பேரவையின் எஞ்சிய ஆயள்காலமான அடுத்த ஆண்டு மே மாதம் வரை, கூட்டங்களில் பங்கேற்க முடியாது. 2014-ஆம் ஆண்டு தனி மாநிலமாக தெலங்கானா உருவாக்கப்பட்ட பிறகு இப்படி நடப்பது இதுவே முதல்முறையாகும்.  

அத்துடன் காங்கிரஸ் அவைத் தலைவர் ஜன ரெட்டி உள்ளிட்ட 11 காங்கிரஸ் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சபாநாயகரின் இந்த முடிவுக்கு ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பாக பிற கட்சிகளுடன் சபாநாயகர் கலந்து ஆலோசித்து இருக்கலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com