மோரீஷஸுக்கு ரூ.650 கோடி கடன்: இந்தியா அறிவிப்பு

மோரீஷஸ் அரசு, ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கு உதவும் வகையில் 10 கோடி டாலர் (இந்திய மதிப்பில் ரூ.650 கோடி) கடனை அந்நாட்டுக்கு வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.

மோரீஷஸ் அரசு, ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கு உதவும் வகையில் 10 கோடி டாலர் (இந்திய மதிப்பில் ரூ.650 கோடி) கடனை அந்நாட்டுக்கு வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மோரீஷஸில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு அந்நாட்டு அதிபர் அமீனா குரீப் ஃபக்கீம் விருந்து அளித்து கௌரவித்தார். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து மோரீஷஸ் சுதந்திரம் பெற்றதன் 50 ஆம் ஆண்டை முன்னிட்டு அந்நாட்டுக்கு ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், மோரீஷஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகன்னாத் மற்றும் அவரது அமைச்சர்களுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும், மோரீஷஸுக்கும் இடையே திங்கள்கிழமை பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இது குறித்து கோவிந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில் 'இந்தியாவும் மோரீஷஸும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு சார்ந்த நலன்களைப் பகிர்ந்து கொண்டுள்ளன. மோரீஷஸுக்கு கடல்பகுதி ரோந்துக் கப்பலை இந்தியா கடன் திட்டத்தின்கீழ் வழங்கும்' என்று தெரிவித்தார்.
இதற்கான ஒப்பந்தத்தைத் தவிர, பிகாரின் நாளந்தா பல்கலைக்கழகத்துக்கும் மோரீஷஸுக்கும் இடையிலான ஒப்பந்தம், இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் (யூபிஎஸ்சி) மோரீஷஸ் அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் இடையிலான ஒப்பந்தம், இருநாடுகளுக்கும் இடையே கலாசாரப் பரிவர்த்தனைகளை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஆகியவவையும் கையெழுத்தாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com