ராஜீவ் கொலையாளிகளை ராகுல் மன்னிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

ராஜீவ் காந்தி கொலையாளிகளை ராகுல் காந்தி மன்னித்துவிட்டதாக கூறுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
ராஜீவ் கொலையாளிகளை ராகுல் மன்னிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

ராஜீவ் காந்தி கொலையாளிகளை ராகுல் காந்தி மன்னித்துவிட்டதாக கூறுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
முன்னதாக, தனது தந்தை ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர்களை தானும், தனது சகோதரி பிரியங்கா காந்தியும் முழுமையாக மன்னித்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். 
இந்நிலையில், இது தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) சுப்பிரமணியன் சுவாமி திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், 'தனது தந்தையைக் கொலை செய்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரை மகன் (ராகுல்) மன்னித்துவிட்டதாகக் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 
எனவே, முன்னாள் பிரதமர் (ராஜீவ் காந்தி) படுகொலை குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். 
விடுதலைப் புலிகளுக்கும், அவரது (ராஜீவ் காந்தி) குடும்பத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகம் எழுகிறது' என்று கூறியுள்ளார்.
பின்னர் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, 'ராஜீவ் காந்தி உண்மையான தேசியவாதி. 
எனவே, அவரைக் கொலை செய்தவர்களுக்கு எந்த கருணையும் காட்டக் கூடாது. தங்கள் நாட்டுக்கு இந்திய ராணுவத்தை அனுப்பியதால் ராஜீவை கொலை செய்ததாக விடுதலைப் புலிகள் வெளிப்படையாக அறிவித்தனர். 
ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளி என்று நிருபிக்கப்பட்ட நளினிக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 
வெளிநாட்டு (இலங்கை) பயங்கரவாத இயக்கத்தினருடன் இணைந்து சதி செய்து நமது முன்னாள் பிரதமரை கொலை செய்தவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்று கூறுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ராகுல் காந்தியின் பேச்சில் தேசப்பற்று இல்லை. 
முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களுக்குதான் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது; 
அவரது தந்தையைக் கொன்றவர்கள் என்பதால் மட்டும் தண்டனை அளிக்கப்படவில்லை என்பதை ராகுல் புரிந்து கொள்ள வேண்டும்.
ராஜீவ் கொலைக் குற்றவாளியான நளினியை, பிரியங்கா காந்தி சிறையில் சென்று சந்தித்தது ஏன்? பிரிட்டனில் படித்து வரும் நளினியின் மகள் மீது சோனியா காந்தி அக்கறை எடுத்துக் கொள்வது ஏன்? 
இந்திரா காந்தி பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் நளினி படிக்க உதவித் தொகை அளித்தது ஏன்? கொலையாளிகளிடம் ராஜீவ் குடும்பத்தினர் இந்த அளவுக்கு கருணை காட்டுவது ஏன்? இதில் வேறு ஏதோ விஷயம் உள்ளது என்ற சந்தேகம் எழுகிறது என்றார் சுப்பிரமணியன் சுவாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com