2008-இல் விடுபட்ட விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி சலுகை

மகாராஷ்டிரத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டைய கடன் தள்ளுபடி திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கும், தனது அரசின் கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர்
2008-இல் விடுபட்ட விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி சலுகை

மகாராஷ்டிரத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டைய கடன் தள்ளுபடி திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கும், தனது அரசின் கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்துள்ளார்.
கடந்த 2008-இல் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, நாடு முழுவதும் ரூ.60,000 கோடி அளவுக்கு விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, மகாராஷ்டிரத்தில் ரூ.8,900 கோடி விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன் மூலம் 42 லட்சம் விவசாயிகள் பலனடைந்தனர்.
இதனிடையே, மகாராஷ்டிர விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக ரூ.34,000 கோடி அளவுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை மாநில பாஜக அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. 2009-ஆம் ஆண்டை கணக்கிட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாசிக்கில் இருந்து மும்பைக்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் பிரமாண்ட நடை பேரணியை மேற்கொண்டனர். அவர்களுடன், மாநில அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகள் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து, தங்களது போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநில சட்ட மேலவையில் அறிக்கையொன்றை ஃபட்னவீஸ் தாக்கல் செய்தார். அதில், 'மகாராஷ்டிரத்தில் 2001 முதல் 2009 வரை பயிர்க்கடன்களை செலுத்த தவறிய விவசாயிகளும், 2008-ஆம் ஆண்டு கடன் தள்ளுபடி திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளும் தற்போதைய அரசின் கடன் தள்ளுபடி திட்ட வரம்புக்குள் கொண்டுவரப்படவுள்ளனர்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com