ஆங்கிலேயர் ஆட்சியில் பயன்படுத்திய வார்த்தைகள் வேண்டாம்

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சி செலுத்தியபோது பயன்படுத்திய வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அமைச்சர்களிடம் மாநிலங்களவைத்
ஆங்கிலேயர் ஆட்சியில் பயன்படுத்திய வார்த்தைகள் வேண்டாம்

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சி செலுத்தியபோது பயன்படுத்திய வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அமைச்சர்களிடம் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தனது பேச்சைத் தொடங்கிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'மேற்குறிப்பிட்ட விஷயங்களை அவையில் தாக்கல் செய்ய இறைஞ்சுகிறேன்' (ஐ பெக் டு லே) என்று ஆங்கிலத்தில் பேச்சைத் தொடங்கினார். அப்போது, குறுக்கிட்ட வெங்கய்ய நாயுடு, 'நாம் சுந்திர இந்தியாவில் இருக்கிறோம். எனவே, இப்போதும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பயன்படுத்திய வார்த்தைகளை இங்கு பயன்படுத்த வேண்டாம் என்று அமைச்சர்களைக் கேட்டுக் கொள்கிறேன். 'நான் இந்த விஷயங்களை அவையில் தெரிவிக்க அல்லது தாக்கல் செய்ய எழுந்து பேசுகிறேன்' என்று மட்டும் கூறினால் போதுமானது. 'இறைஞ்சுகிறேன்' (பெக்) என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு, சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், அவைத் தலைவர் கூறியபடி, 'நான் மேற்குறிப்பிட்ட விஷயங்களை அவையில் தெரிவிக்க எழுகிறேன்' (ஐ ரைஸ் டு லே) என்று பேச்சைத் தொடங்கினார்.
முன்னதாக, 'எம்.பி.க்கள் அவையில் இதுபோன்ற இறைஞ்சும் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம்' என்று கடந்த ஆண்டு வெங்கய்ய நாயுடு அவையில் அறிவுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com