ஜெயா பச்சனுக்கு ரூ.1,000 கோடி சொத்துகள்!

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருக்கும் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு ரூ.1,000 கோடி மதிப்புக்கு சொத்துகள் உள்ளன.

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருக்கும் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு ரூ.1,000 கோடி மதிப்புக்கு சொத்துகள் உள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சி சார்பில் போட்டியிட ஜெயா பச்சன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த வேட்பு மனுவுடன், தனது சொத்துகள் குறித்த பட்டியலையும் பிரமாணப் பத்திரமாக அவர் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
எனக்கும், எனது கணவர் அமிதாப் பச்சனுக்கும் ரூ.460 கோடிக்கும் மேல் அசையா சொத்துகள் உள்ளன. இதேபோல் ரூ.540 கோடிக்கும் மேல் அசையும் சொத்துகள் உள்ளன.
அமிதாப் பச்சனிடம் ரூ.3.4 கோடி மதிப்புக்கு கைக்கடிகாரங்களும், என்னிடம் ரூ.51 லட்சம் மதிப்புக்கு கைக்கடிகாரங்களும் உள்ளன. அமிதாப் பச்சனிடம் ரூ.9 லட்சம் மதிப்புக்கு பேனாக்கள் உள்ளன. எனக்கும், எனது கணவருக்கும், பிரான்ஸ் நாட்டில் 3,175 சதுர மீட்டர் அளவுக்கு சொந்தமாக நிலம் உள்ளது. நொய்டா, போபால், புணே, ஆமதாபாத், காந்திநகர் ஆகிய இடங்களிலும் சொத்துகள் உள்ளன.
எனக்கு லக்னௌவில் ரூ.2.2 கோடி மதிப்புக்கு எனக்கு 1.22 ஹெக்டேர் விவசாய நிலமும், பாராபங்கி மாவட்டத்தில் அமிதாப் பச்சனுக்கு ரூ.5.7 கோடி மதிப்புக்கு 3 ஏக்கர் நிலமும் உள்ளது என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் ஜெயா பச்சன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, கடந்த 2012ஆம் ஆண்டில் தெரிவித்திருந்த சொத்துகளின் மதிப்புகளைக் காட்டிலும், தற்போது ஜெயா பச்சனின் சொத்து மதிப்பு 2 மடங்கு அதிகரித்திருத்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டில் மாநிலங்களவைக்கு நடந்த தேர்தலில், பாஜக எம்.பி. ரவீந்திர கிஷோர் தனக்கு ரூ.800 கோடி மதிப்புக்கு சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், ஜெயா பச்சன் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படும்பட்சத்தில், அவர்தான் மிகவும் வசதிப்படைத்த மாநிலங்களவை எம்.பி.யாக கருதப்படுவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com