நீரவ் மோடி நிறுவனத்தின்அங்கீகாரம் ரத்து செய்யப்படவில்லை: மத்திய அரசு

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையாக பல்வேறு நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பான பட்டியலில் தொழிலதிபர் நீரவ் மோடியின் நிறுவனம்

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையாக பல்வேறு நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பான பட்டியலில் தொழிலதிபர் நீரவ் மோடியின் நிறுவனம் எதுவும் இடம்பெறவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இரு ஆண்டுகளுக்கும் மேலாக உரிய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடாத நிறுவனங்களுக்கு எதிராக மட்டுமே அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அரசு விளக்கமளித்துள்ளது.
நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கணக்கில் வராத பணத்தை வெளிக்கொணருவதற்காக மத்திய பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து பல்வேறு போலி நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. வர்த்த நடவடிக்கைகளில் எதுவும் ஈடுபடாமல் வெறுமனே கருப்புப் பணத்தை சட்டப்பூர்வமாக்க அத்தகைய நிறுவனங்கள் தொடங்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து ஆக்கப்பூர்வமாக செயல்படாமல் இருந்த 2.26 லட்சம் நிறுவனங்களின் அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட பட்டியலின் எந்தெந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன? என்பது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ரூ.12,717 கோடி கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்ட தொழிலதிபர் நீரவ் மோடியின் நிறுவனமும் அப்பட்டியலில் இடம்பெற்றிருந்ததா? என மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மத்திய பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை இணையமைச்சர் பி.பி.செளதரி எழுத்துப்பூர்வ பதில்:
நாடு முழுவதும் 2.26 லட்சம் நிறுவனங்கள் முறையாக செயல்படாமல் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டன. அதேவேளையில் நீரவ் மோடியின் நிறுவனம் அந்த வரம்புக்குள் வரவில்லை. அதன் காரணமாக அவருக்குச் சொந்தமான ஸ்தாபனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படவில்லை என்று அதில் செளதரி தெரிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com