பி.என்.பி வங்கியில் மேலும் ரூ.200 கோடி மோசடி கண்டுபிடிப்பு: தோண்டத் தோண்ட கிளம்பும் பூதங்கள்! 

பி.என்.பி வங்கியின் மற்றொரு மும்பை கிளையில் கடன் உத்தரவாத கடிதங்கள் மூலம் ரூ.200 கோடி மோசடி நடந்ததிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சிபிஐயில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பி.என்.பி வங்கியில் மேலும் ரூ.200 கோடி மோசடி கண்டுபிடிப்பு: தோண்டத் தோண்ட கிளம்பும் பூதங்கள்! 

மும்பை: பி.என்.பி வங்கியின் மற்றொரு மும்பை கிளையில் கடன் உத்தரவாத கடிதங்கள் மூலம் ரூ.200 கோடி மோசடி நடந்ததிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சிபிஐயில் புகார் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் ரூ.11400 கோடி மதிப்பிலான பண மோசடி நடந்து உள்ளது கடந்த மாதம் 14-ஆம் தேதி கண்டறியப்பட்டது. மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி  நிரவ் மோடியின் கீதாஞ்சலி வைர விற்பனை நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இது தொடர்பாக நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்ஷி இருவர் மீதும் சி.பி.ஐ.யிடமும் புகார் அளிக்கப்பட்டது.

சிபிஐ இது தொடர்பாக வங்கி அதிகாரிகளையும் நிரவ் மோடியின் நிறுவன அலுவலர்கள் மூவரையும் கைது செய்துள்ளது. ஆனால் ஜனவரி மாத துவக்கத்திலேயே நிரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஷி வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பி ஓடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு இந்திய விசாரணை முகமைகள் மூலம் நிரவ் மோடியை இந்தியா அழைத்து வரும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பின்னர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மெஹுல் சோக்ஷி மேலும் ரூ.924 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கடந்த செவ்வாயன்று நீதிமன்றத்துக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கை ஒன்றில் வங்கி நிர்வாகம் இதனைத் தெரிவித்துள்ளது.  

இந்நிலையில் பி.என்.பி வங்கியின் மற்றொரு மும்பை கிளையில் கடன் உத்தரவாத கடிதங்கள் மூலம் ரூ.200 கோடி மோசடி நடந்ததிருப்பது தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு சிபிஐயில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயிடம் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வங்கியின் பிராட் ஹவுஸ் கிளையில் உள்ள அதிகாரிகள் இருவர், சந்திரி பேப்பர் அண்ட் அலைட் புரோடக்ட்ஸ் என்ற சிறிய நிறுவனத்தின் இயக்குநர்களுடன் இணைந்து சதி செய்து, போலியான இரண்டு கடன் உத்தரவாத கடிதங்களை அளித்துள்ளனர்.

ஏப்ரல் 2017-இல் வழங்கப்பட்ட இதனைக் கொண்டு அந்நிறுவனமானது ரூ.200 கோடி அளவில் பணத்தினைச் சேர்க்க உதவியுள்ளனர். இரண்டு நிகழ்வுகளிலும் ஒரே அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

வங்கிகள் இது போன்ற கடன் உத்தரவாத கடிதங்கள் வழங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்த வாராத துவக்கத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்நிலையில் வெளிவரும் தகவல்கள் இதே போல் எத்தனை ஊழல்கள் பி.என்.பி வங்கியில் நடைபெற்றிருக்கும் என்ற சந்தேகத்தினை எழுப்புகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com