ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தை நாடாளுமன்றத்தில் தீவிரமாக எழுப்ப வேண்டும்: கட்சி எம்.பி.க்களுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவு

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கோரும் விவகாரத்தை, நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) எம்.பி.க்கள் தீவிரமாக எழுப்ப வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தை நாடாளுமன்றத்தில் தீவிரமாக எழுப்ப வேண்டும்: கட்சி எம்.பி.க்களுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவு

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கோரும் விவகாரத்தை, நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) எம்.பி.க்கள் தீவிரமாக எழுப்ப வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தில்லியிலிருக்கும் டிடிபி எம்.பி.க்களுடன் அமராவதியில் இருந்து கொண்டு சந்திரபாபு நாயுடு, டெலி கான்பரன்சிங் மூலம் உரையாடியதாவது:
நிதி மசோதா (பட்ஜெட்) நிறைவேற்றப்பட்டபிறகு, நாடாளுமன்றம் இன்னும் சில நாள்களில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படலாம். எனவே, நாடாளுமன்றத்தில் நீங்கள் (டிடிபி எம்.பி.க்கள்) நமது மாநிலத்குக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கோரும் கோரிக்கை குறித்தும், வருவாய் பற்றாக்குறை விவகாரத்தையும் எழுப்ப வேண்டும். நாடாளுமன்றத்தில் அதுகுறித்து விவாதிக்க வேண்டும்.
ஆந்திரத்துக்கு கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றாதது, மாநில மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் கூட்டணி கட்சியாக இருக்கும் டிடிபி எம்.பி.க்களை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்துப் பேச மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. பாஜகவின் கூட்டணி கட்சியாக தெலுங்கு தேசம் உள்ளதா? ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உள்ளதா?
கூட்டணி கட்சி எம்.பி.க்களை சந்தித்துப் பேச முடியாது என்று எப்படி அவர் (பியூஷ் கோயல்) மறுக்கலாம்? அதேநேரத்தில் எதிர்க்கட்சி (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்) எம்.பி.க்களை அவர் எப்படி சந்திக்கலாம்? யாரை அவர் அவமதிக்கிறார்? ஆந்திரத்தைத்தான் அவமதிக்கிறார்.
தேவையில்லாத கோரிக்கைகளை தெலுங்கு தேசம் எழுப்பவில்லை. ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதியைத்தான் செயல்படுத்த தெலுங்கு தேசம் கோருகிறது. இதை ஊடகங்களிடம் எம்.பி.க்கள் தெரியப்படுத்த வேண்டும் என்றார் சந்திரபாபு நாயுடு.
முன்னதாக, ஆந்திர மறுசீரமைப்புச் சட்டம்-2014ஐ செயல்படுத்துவதில் மத்திய அரசு அக்கறையில்லாமல் செயல்படுவதாக தெரிவித்து ஆந்திர சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை சந்திரபாபு நாயுடு கொண்டு வந்தார். சட்டப் பேரவையில் 4 மணி நேரம் நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு, அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com