ஒடிஸாவில் தனியார் பேருந்துகள் ஒரு நாள் வேலைநிறுத்தம்

ஒடிஸா மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் பேருந்துகள் சங்கம் புதன்கிழமை ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது.

ஒடிஸா மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் பேருந்துகள் சங்கம் புதன்கிழமை ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது.
இதனால் அரசு பேருந்துகளில் அதிகக் கூட்டம் காணப்பட்டதால், பெண்களும், வயதானவர்களுக்கும் சிரமத்துக்குள்ளாகினர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
நகரம் மற்றும் வெளியூர்களுக்கு தனியார் பேருந்துகளுக்கென்று தனி வழித்தடத்தை அமைத்துத் தர வேண்டும் என்றும், வரிவிதிப்பை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தனியார் பேருந்துகள் இல்லாததால் மினி வேன்கள் போக்குவரத்துக்காக பெரிதும் பயன்பட்டன என்று போலீஸார் தெரிவித்தனர்.
ஒடிஸா மாநில தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், 'அரசுப் பேருந்துகளுக்கான வழித்தடத்தையும், தனியார் பேருந்துகளுக்கான வழித்தடத்தையும் தனித்தனியாக பிரிக்க வேண்டும். ஒரே வழித்தடத்தில் இயங்கி வருவதால் எங்களக்கு தொழிலில் நஷ்டம் ஏற்படுகிறது. தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் அதிக வரிபிடித்தமும் செய்யப்படுகிறது. அதையும் குறைக்க மாநில அரசு பரிசீலனை செய்ய வேண்டும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com