நடிகை பாவனா வழக்கு: விசாரணை தொடக்கம்

நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கின் விசாரணை, கேரள மாநிலம், எர்ணாகுளத்திலுள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் புதன்கிழமை தொடங்கியது.

நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கின் விசாரணை, கேரள மாநிலம், எர்ணாகுளத்திலுள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் புதன்கிழமை தொடங்கியது.
மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளவர் பாவனா. கொச்சியில் கடந்த ஆண்டு பாவனா கடத்தப்பட்டு, ஓடும் காரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வழக்கில் 'பல்சர்' சுனி, மலையாள நடிகர் திலீப் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கடந்த ஆண்டு கைதான பல்சர் சுனி, தற்போது சிறையில் உள்ளார். இதேபோல், கடந்த ஜூலையில் கைதான திலீப், 3 மாதங்களுக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், எர்ணாகுளத்திலுள்ள முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி, திலீப் உள்பட குற்றம்சாட்டப்பட்ட 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, பாவனா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில், தனது வழக்கை விசாரிக்க பெண் நீதிபதி தலைமையில் சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்; வழக்கு விசாரணையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டது.
இதனிடையே, அந்த சம்பவம் தொடர்பான மின்னணு ஆதாரங்களின் நகலை தனக்கு வழங்க வேண்டும் என்று திலீப் தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, குறிப்பிட்ட சில ஆதாரங்களைத் தவிர இதர அனைத்து ஆதாரங்களின் நகல்களையும் எதிர் தரப்பினருக்கு வழங்கலாம் என்று தெரிவித்த நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com