கடைசியாக தெலுங்கு தேசம் கட்சி விழித்துக்கொண்டது: எதிர்கட்சித் தலைவர் ஜெகன் கிண்டல்

ஒருவழியாக தெலுங்கு தேசம் கட்சி ஆந்திர மக்கள் நலனில் கடைசி நேரத்தில் விழித்துக்கொண்டதாக ஆந்திர எதிர்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி விமரிசித்துள்ளார்.
கடைசியாக தெலுங்கு தேசம் கட்சி விழித்துக்கொண்டது: எதிர்கட்சித் தலைவர் ஜெகன் கிண்டல்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் பாஜக அரசு பொறுப்பேற்ற இந்த 4 ஆண்டுகளில் அவர்களுக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக அக்கட்சித் தலைவரும், ஆந்திர எதிர்கட்சித் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார். இருப்பினும் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக, தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு அறிவித்தார். மேலும் ஆந்திர மக்களின் நலனை கருத்தில் கொண்டே இம்முடிவை எடுத்துள்ளதாகவும் ஆந்திர சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, கடைசியில் தெலுங்கு தேசம் கட்சி விழித்துக்கொண்டதாக விமரிசித்துள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி கடந்த 4 ஆண்டுகளாக மக்களின் ஆதரவுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இதில் ஒருவழியாக தெலுங்கு தேசம் கட்சி கடைசி நேரத்தில் விழித்துக்கொண்டது. இது அரசியல் நெருக்கடியால் நடந்தாலும், ஒய்எஸ்ஆர் கட்சியை முன்னோடியாக் கொண்டுதான் தெலுங்கு தேசம் செயல்படுகிறது.

இது ஆந்திர மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. இவ்விவகாரத்தில் ஆந்திர மக்களின் நலன் காக்கப்படும் வரை எங்கள் கட்சி தொடர்ந்து போராடும். ஆந்திர மக்களின் வளர்ச்சியே எங்களுக்கு என்றும் முக்கியம். இதில் எங்களுக்கு எவ்வித அரசியல் பாகுபாடுகளும் கிடையாது.

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முதலில் நாங்கள் கொண்டு வந்தாலும், வேறு ஒருவர் கொண்டு வந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான். இதில் ஆந்திர மக்களின் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே எங்கள் எண்ணம். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத்தர வேண்டும் என்பதே எங்கள் லட்சியம் என்று ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com