வாபஸ் ஆகிறதா 2000 ரூபாய் நோட்டு?: மத்திய அரசு பதில்! 

தற்பொழுது புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறுவது குறித்து மக்களவையில் கேட்டகப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
வாபஸ் ஆகிறதா 2000 ரூபாய் நோட்டு?: மத்திய அரசு பதில்! 

புதுதில்லி: தற்பொழுது புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறுவது குறித்து மக்களவையில் கேட்டகப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.  

இந்நிலையில் தற்பொழுது புழக்கத்தில் உள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மத்திய அரசு தடை செய்யுமா அல்லது புழக்கத்தில் இருந்து வாபஸ் பெற்று விடுமா என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது:

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்பப் பெறும் எண்ணமோ அல்லது தடை செய்யும் எண்ணமோ இல்லை.

அதேசமயம் கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஸ்வர் உள்ளிட்ட முக்கியமான 5 நகரங்களில் 10 ரூபாய் பிளாஸ்டிக் கரன்சிகளை புழக்கத்தில் விட முடிவு செய்துள்ளோம்.  ஆனால் இது எப்போது புழக்கத்தில் விடப்படும் என்று ற முடியாது.

இவ்வாறு அவர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com