குரங்கணி காட்டுத் தீ குறித்து எச்சரிக்கை விடுக்கவில்லையா? மறுக்கும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்

குரங்கணி காட்டுத் தீ குறித்து மத்திய அமைச்சகத்திடம் இருந்து எந்த எச்சரிக்கை செய்தியும் வரவில்லை என்று ஊடகங்கள் கூறியிருக்கும் நிலையில், மத்திய அமைச்சகம் அதனை மறுத்துள்ளது.
குரங்கணி காட்டுத் தீ குறித்து எச்சரிக்கை விடுக்கவில்லையா? மறுக்கும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்


புது தில்லி: குரங்கணி காட்டுத் தீ குறித்து மத்திய அமைச்சகத்திடம் இருந்து எந்த எச்சரிக்கை செய்தியும் வரவில்லை என்று ஊடகங்கள் கூறியிருக்கும் நிலையில், மத்திய அமைச்சகம் அதனை மறுத்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் துறையின் காட்டுத் தீ பற்றிய எச்சரிக்கை செய்தி எதுவும் மாநில வனத்துறைக்கு கிடைக்கவில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதனை மறுத்துள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், வனம்  மற்றும் சிறப்பு செயலர் சித்தாந்த தாஸ் கூறுகையில், மத்திய அமைச்சகத்திடம் இருந்து அனுப்பப்பட்ட எச்சரிக்கை செய்தி மாநில அரசுக்கு சரியாக சென்றடைந்ததா என்பதை என்னால் உறுதி செய்ய முடியாது. எங்கிருந்து எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டதோ அந்த துறை அதிகாரிகளை கேட்டறிந்த பிறகே அது பற்றி கூற முடியும் என்றார்.

குரங்கணி காட்டுத் தீயில், தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இது பற்றி கூறுகையில், காட்டுத் தீ குறித்து தமிழ்நாடு வனத்துறையின் அதிகாரிகளுக்கு மார்ச் 11ம் தேதி மதியம் 2.29 மணிக்கும், 3.37 மணிக்கும் இரண்டு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. 

அதாவது, எம்ஓடிஐஎஸ் மற்றும் எஸ்என்பிபி ஆகிய இரண்டு செயற்கைக் கோள்களின் மூலம் கிடைத்த தகவல்களை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள தேசிய ரிமோட் சென்ஸிங் மையத்தில் இருந்து எங்களுக்கு எச்சரிக்கை செய்தி கிடைக்கப் பெற்றதும் அது குறித்து தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக தகவலை அனுப்பினோம்.

வழக்கமாக காட்டுத் தீ குறித்து அந்தந்த மாநிலங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக புகைப்படங்கள் மற்றும் எழுத்துப்பூர்வமாக எச்சரிக்கை அனுப்புவது வழக்கம்.

இது ஒரு தானியங்கி நடவடிக்கையாகும். இரவு நேரத்தில் ஏற்படும் காட்டுத் தீ குறித்தும் அவ்வப்போது மின்னஞ்சல்கள் அனுப்பி வைக்கப்படும். அதுபோலத்தான் மார்ச் 11ம் தேதியும் 2 மின்னஞ்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்கிறது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com