மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ் சந்திப்பு: 3-ஆது அணி அமைக்க திட்டம்

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் திங்கள்கிழமை சந்தித்தனர். 
மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ் சந்திப்பு: 3-ஆது அணி அமைக்க திட்டம்

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும் தெலுங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியுடன் திங்கள்கிழமை சந்தித்தார்.

தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத 3-ஆவது அணி அமைப்பது தொடர்பாக இவ்விரு தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது இதுதொடர்பாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

3-ஆவது அணி அமைப்பது தொடர்பாக இவர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ள கருத்துக்கு பிற மாநிலங்களைச் சேர்ந்த பல கட்சிகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. இதையடுத்து இவர்கள் இருவரும் 3-ஆவது அணி அமைப்பது தொடர்பான தங்கள் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர். 

நாங்கள் இருவரும் சந்தித்திருப்பதி ஒரு புதிய அத்தியாத்தின் தொடக்கம் மட்டும்தான் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அதுபோல பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சிறப்பான ஆட்சியைத் தர தவறிவிட்டன. எனவே இனிவரும் காலத்தில் மக்களாட்சி அமையும் என சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ஆண்டு விழா வருகிற ஏப்ரலில் கொண்டாடப்படவுள்ள வேளையில், 3-ஆவது அணி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், மத்திய அரசுக்கு எதிராக ஆந்திராவைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தொடர்ந்து முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com