தெலுங்கு தேசத்தை வீழ்த்த பாஜக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஜனசேனா கூட்டணி: சந்திரபாபு நாயுடு

தெலுங்கு தேசத்தை வீழ்த்துவதற்காகவே பாஜக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் ஜனசேனா இணைந்து செயல்படுவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செவ்வாய்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.
தெலுங்கு தேசத்தை வீழ்த்த பாஜக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஜனசேனா கூட்டணி: சந்திரபாபு நாயுடு

தெலுங்கு தேசம் கட்சியை தெலுங்கு தேசத்தை வீழ்த்துவதற்காகவே பாஜக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் ஜனசேனா இணைந்து செயல்படுவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கூறியதாவது:

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவது மட்டும் தான் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியக் குறிக்கோள். நாங்கள் மத்தியில் தேசிய ஐனநாயகக் கூட்டணியில் இடம்பிடித்திருந்தாலும் எங்களுக்கு மாநிலத்தின் உரிமைகள்தான் முக்கியம். ஆந்திர மக்களின் நலனும், வளர்ச்சியும் தான் முதன்மையானது.

எனவே, ஆந்திர மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டே மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகினேன். ஆந்திர மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து மற்றும் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறும் வரை தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் துரிதமாகவும், புத்திசாலித்தனத்துடனும் செயல்பட வேண்டும். 

இவ்விவகாரம் தொடர்பாக பிற கட்சித் தலைவர்களுடன் போச்சுவார்த்தை நடத்த நான் தயாராக உள்ளேன். ஆனால் தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்துவதற்காகவே பாஜக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஜனசேனா உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்புவதாக கூறும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com