மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அமளி தொடரும் -தம்பிதுரை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை நாடாளுமன்ற அவைகளை முடக்கும் அதிமுக உறுப்பினர்களின் அமளி தொடரும் என்று கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினரும்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை நாடாளுமன்ற அவைகளை முடக்கும் அதிமுக உறுப்பினர்களின் அமளி தொடரும் என்று கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினரும், மக்களவைத் துணைத் தலைவருமான மு.தம்பிதுரை தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்பிக்கள் திங்கள்கிழமையும் தொடர்ந்து 11 நாள்களாக அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இது குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே மு.தம்பித்துரை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க இதுவரை மத்திய அரசு உறுதி அளிக்கவில்லை. இதனால்தான் அதிமுக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அவையை முடக்குவதே அதிமுவின் குறிக்கோள். எனவே, அவையில் இது தொடர்பாக மத்திய அரசு வாக்குறுதி அளிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமரைச் சந்திக்கவும் நேரம் கேட்டிருக்கிறோம். ஆவன செய்வதாக அவர் கூறியிருக்கிறார். பிரதமர் அலுவலகத்தைவிட நாடாளுமன்றம் மிகவும் உயர்ந்தது. அதனால்தான், அங்கு மக்களின் உணர்வைப் பிரதிபலித்து வருகிறோம். அவை அலுவல்கள் நடைபெறாதது ஆளும் கட்சிக்குத்தான் தர்மசங்கடமாகும். மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக செயல்படவில்லை. மக்களவையில் அதிமுகவுடன் இணைந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காங்கிரஸ் குரல் கொடுக்காதது ஏன்?' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com