வாக்குறுதிகளை மோடியால் நிறைவேற்ற இயலாது: ராகுல் விமர்சனம்

வேலைவாய்ப்பு தொடர்பாக பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்
வாக்குறுதிகளை மோடியால் நிறைவேற்ற இயலாது: ராகுல் விமர்சனம்

வேலைவாய்ப்பு தொடர்பாக பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் பால் குருக்மன் தெரிவித்த கருத்துகளை மேற்கோள் காட்டி அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் மிகப் பெரிய பிரச்னைûயாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக பால் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக ராகுல் காந்தி சுட்டுரையில் (டுவிட்டர்) திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
கடந்த 2 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தெரிவித்து வந்த கருத்தை தற்போது பொருளாதார வல்லுநர் பால் குருக்மன் உறுதிபடுத்தியுள்ளார். வேலைவாய்ப்பின்மையே இந்தியாவுக்கு எதிராக இருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல். துரதிருஷ்டவசமாக இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாத பிரதமர் நமக்கு கிடைத்துள்ளார். நாட்டு மக்களின் வாழ்வில் 'நல்ல நாளினை' உருவாக்குவேன் என அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது கடினம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது என்று அந்தப் பதிவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போவதாக கடந்த மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். அதை முன்னிறுத்தி ராகுல் காந்தி தொடர்ந்து மோடிக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com