அவைக்கு வராத எம்.பி.க்களுக்கு சம்பளம் கூடாது: மனோஜ் திவாரி

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும்போது அதன் அலுவல்களில் பங்கேற்காத எம்.பி.க்களுக்கு ஊதியம் தரத் தேவையில்லை என்ற புதிய விதிமுறையை கொண்டுவர வேண்டும் என்று பாஜக எம்.பி.யும்,

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும்போது அதன் அலுவல்களில் பங்கேற்காத எம்.பி.க்களுக்கு ஊதியம் தரத் தேவையில்லை என்ற புதிய விதிமுறையை கொண்டுவர வேண்டும் என்று பாஜக எம்.பி.யும், அக்கட்சியின் தில்லி தலைவருமான மனோஜ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடாளுமன்றத்தில் சட்டங்களை இயற்றுபவர்கள் தங்களது பொறுப்புகளை தட்டிக் கழித்துவிட்டுச் செல்கின்றனர். தங்களுடைய ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்யாத உறுப்பினர்களின் ஊதியத்தை குறைக்க வேண்டும்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும்போது தினசரி அவை அலுவல்களில் பங்கேற்காத எம்.பி.க்களுக்கு ஊதியம் அளிக்கப்பட கூடாது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தில்லியில் வடகிழக்கு பகுதி மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக மனோஜ் திவாரி பதவி வகித்து வருகிறார்.
நாடாளுமன்றத்தின் 2-ஆவது கட்ட அமர்வில் பல்வேறு விவகாரங்களை எழுப்பி மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர் இவ்வாறு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com