இந்திய தேர்தல் நடைமுறைகளில் தலையிட முயன்றால் கடும் நடவடிக்கை: பேஸ்புக்குக்கு மத்திய அரசு எச்சரிக்கை! 

இந்திய தேர்தல் நடைமுறைகளில் தலையிட முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்குக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய தேர்தல் நடைமுறைகளில் தலையிட முயன்றால் கடும் நடவடிக்கை: பேஸ்புக்குக்கு மத்திய அரசு எச்சரிக்கை! 

புதுதில்லி: இந்திய தேர்தல் நடைமுறைகளில் தலையிட முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்குக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் பிரபலமான சமூக வலைத்தளங்களில் பேஸ்புக்கும் ஒன்று. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் இதனைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் தற்பொழுது பேஸ்புக்கில் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு தனியார் நிறுவனங்கள் மூலம் அரசியல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.  

இது தொடர்பாக இங்கிலாந்தினைச் சேர்ந்த 'கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா' என்ற அரசியல் பிரசார நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த இங்கிலாந்து எம்.பி. டாமியன் கொலின்ஸ் என்பவர் தலைமையில் எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முன் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் வரும் 26–ந் தேதிக்குள் நேரில் ஆஜராகி  விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய தேர்தல் நடைமுறைகளில் தலையிட முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேஸ்புக்குக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது  தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியர்களின் தகவல்கள் மேலாண்மை விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனம் சமரசம் செய்துக் கொண்டது என்று  தெரிய வந்தால், நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். இதுதொடர்பாக விளக்கம் கோரி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு சம்மன் விடுக்கப்படும்.

இன்று இந்தியாவில் 20 கோடி பேர் பேஸ்புக்கில் கணக்கு வைத்து உள்ளார்கள். நம்மிடமும் கடுமையான ஐடி சட்டம் உள்ளது. பயனாளர்களின் தகவல்கள் பகிர்வு விவகாரத்தில் இந்தியாவால் பேஸ்புக் அதிகாரிகளுக்கு சம்மன் விடுக்க முடியும்.

நாங்கள் பத்திரிக்கை சுதந்திரத்தை மதிக்கிறோம். ஆனால் இந்தியாவில் தேர்தல் நடைமுறைகளில் பேஸ்புக் செல்வாக்கை செலுத்த நினைத்தால் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். இதன்மூலம் பேஸ்புக் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறோம்.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com