மேலாண்மை வாரியத்தில் கர்நாடகாவுக்கு சாதகமான அம்சங்கள்: சித்தராமையா தலைமையிலான எம்.பி-க்கள் கூட்டத்தில் முடிவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு அழுத்தம் தர கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான எம்.பி-க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலாண்மை வாரியத்தில் கர்நாடகாவுக்கு சாதகமான அம்சங்கள்: சித்தராமையா தலைமையிலான எம்.பி-க்கள் கூட்டத்தில் முடிவு

காவிரி நீர்ப் பங்கீடு வழக்கில் கடந்த பிப்வரி 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது. அதில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் ஆணையம் ஆகியவற்றை அமைக்கும் வகையில் ஒரு செயல்திட்டத்தை 6 வார காலத்தில் உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. 

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் தொடர்ந்து நாள்களாக குரல் எழுப்பி வருகின்றனர். உச்ச நீதிமன்றம் அளித்த காலக்கெடு மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே உள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அனைத்து கட்சி எம்.பிக்களுடன், கர்நாடக முதல்வர் சித்தராமையா வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய அமைச்சர் சதானந்த கௌடா, வீரப்ப மொய்லி, பி.சி.மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலாண்மை வாரிய விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வுக்கு செல்லப்போவதில்லை. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். அவ்வாறு மேலாண்மை வாரியம் அமைக்கும்போது, கர்நாடகாவுக்கு சாதகமான அம்சங்கள் இருக்கும்படி வலியுறுத்தவும் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரி நீரை, டிசம்பரிலேயே தந்துவிட்டோம். எனவே இப்போது மீண்டும் தண்ணீர் தர இயலாது என்று இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com