லிங்காயத்து சிறுபான்மையினர் மதமாக கர்நாடக அரசு அறிவிப்பு

லிங்காயத்து மதத்தினை சிறுபான்மையினர் பட்டியலில் இணைத்து கர்நாடக அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
லிங்காயத்து சிறுபான்மையினர் மதமாக கர்நாடக அரசு அறிவிப்பு

கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் பெங்களூரு விதான செளதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் மார்ச் 19-ந் தேதி நடைபெற்றது. அதில், லிங்காயத்து சமுதாயத்தை தனி மதமாக அங்கீகரிக்க பரிந்துரைத்துள்ள நீதிபதி நாகமோகன் தாஸ் குழுவின் அறிக்கை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில், லிங்காயத்து, வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தை தனி மதமாக அங்கீகரிக்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. எனவே லிங்காயத்து தனி மதமாக கர்நாடக அரசு அறிவித்தது. 

மேலும், கர்நாடக மாநில சிறுபான்மையினர் சட்டப் பிரிவு 2(டி)-இன்படி, லிங்காயத்து, வீரசைவ லிங்காயத்து (பசவண்ணரின் தத்துவங்களில் நம்பிக்கையுள்ளோர்) சமுதாயத்தை சிறுபான்மையினர் மதமாக அங்கீகரிக்குமாறு கர்நாடக மாநில சிறுபான்மையினர் ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளை ஏற்பது என்று அமைச்சரவை முடிவு செய்தது.

இந்தப் பரிந்துரையை மத்திய சிறுபான்மையினர் ஆணையச்சட்டத்தின் பிரிவு 2(சி)-இன்படி அறிவிக்கையாக வெளியிடும்படி கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், லிங்காயத்து, வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தை சிறுபான்மையினர் மதமாக கர்நாடக அரசாங்கம் வெள்ளிக்கிழமை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com