காவிரி நீர்ப் பயன்பாடு: உச்ச நீதிமன்றத்தில் கேரளம் மறு ஆய்வு மனு தாக்கல்

காவிரி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பில் மாற்றம் செய்யக் கோரி கேரள அரசு மறு ஆய்வு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

காவிரி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பில் மாற்றம் செய்யக் கோரி கேரள அரசு மறு ஆய்வு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
 உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி அளித்த காவிரி இறுதித் தீர்ப்பில், "காவிரிப் படுகையில் அல்லாத புனல் மின் திட்டங்களுக்கு நீர் வழங்க வேண்டும் என்ற கேரளத்தின் நிலைப்பாட்டை நடுவர் மன்றம் மறுத்தது சரியே.
 கேரளத்தின் மொத்த தேவைக்கும் 30 டிஎம்சி நீரை வழங்கிய நடுவர் மன்றத்தின் உத்தரவில் உடன்படுகிறோம்' எனத் தெரிவித்திருந்தது.
 இந்நிலையில், இது தொடர்பாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், "காவிரிப் படுகையில் அல்லாத, பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக 4.75 டிஎம்சி நீர் வழங்கியதைப் போல 13 லட்சம் மக்கள் வசிக்கும் கோழிக்கோடு மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக ரூ. 1,613. 22 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ள பானசுரசாகர் திட்டத்துக்கு வழங்கப்பட்ட நீரில் 5 டிஎம்சியை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
 இந்த, நீரை வழங்காவிட்டால், குட்டியாடி பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள 36 ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டு நிலமும், வட கேரளத்தில் பாசனம், மின் விநியோகம் பாதிக்கப்படும். எனவே, கேரளத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 30 டிஎம்சி நீரைக் கொண்டு, காவிரிப் படுகையில் உள்ள பானசுரசாகர் திட்டத்துக்காக 5 டிஎம்சி நீரை பயன்படுத்தும் வகையில் தீர்ப்பில் திருத்தம் செய்ய வேண்டும்; அல்லது விளக்கம் அளிக்க வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com