அகிலேஷின் சிறுபிள்ளைத்தனமான அணுகுமுறை தான் எங்கள் தோல்விக்கு காரணம்: மாயாவதி

அகிலேஷ் யாதவின் சிறுபிள்ளைத்தனமான அணுகுமுறை தான் எங்கள் வேட்பாளர் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என மாயாவதிகுற்றம்சாட்டியுள்ளார்.
அகிலேஷின் சிறுபிள்ளைத்தனமான அணுகுமுறை தான் எங்கள் தோல்விக்கு காரணம்: மாயாவதி

சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் ஆளும் பாஜக அமோக வெற்றிபெற்றுள்ளது. அதில் உத்தரப்பிரதேசத்தில் 10 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 9 இடங்களை பாஜக-வும் 1 இடத்தை சமாஜவாதி கட்சியும் கைப்பற்றின.

இந்நிலையில், செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியதாவது:

சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் சிறுபிள்ளைத்தனமான அணுகுமுறையின் காரணமாகவே பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் பீமாராவ் அம்பேத்கர் தோல்வியுற்றார். எங்களின் வேட்பாளரை சமாஜவாதி கட்சி இந்த தேர்தலில் ஆதரித்திருக்க வேண்டும். அதற்கு மாறாக அவர்கள் தங்களின் வேட்பாளருக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவிட்டனர்.

நான் மற்றும் அகிலேஷின் இடத்தில் இருந்திருந்தால் எனது சொந்த வேட்பாளரை விட கூட்டணி வேட்பாளருக்கு தான் அதிக முக்கியத்துவம் அளித்திருப்பேன். இருந்தாலும் இந்த தேர்தலால் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் கூட்டணியில் எந்த விரிசலும் ஏற்படப்போவதில்லை என்றார்.

முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜவாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்தன. இதில் இவர்கள் கூட்டணி வெற்றியும் பெற்றது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இனி வரும் இடைத்தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்று மாயாவதி அறிவித்துள்ளார். ஏனெனில் 2019 நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராக இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த இரு கட்சிகளின் கூட்டணி இந்த தேர்தலிலும் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com