அயோத்தி பிரச்னைக்கான தீர்வு உச்ச நீதிமன்றத்திடமே உள்ளது: அஜ்மீர் தர்கா தலைவர்

"அயோத்தி பிரச்னைக்கான தீர்வு, உச்ச நீதிமன்றத்திடமே உள்ளது; இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை

"அயோத்தி பிரச்னைக்கான தீர்வு, உச்ச நீதிமன்றத்திடமே உள்ளது; இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்' என்று ராஜஸ்தானிலுள்ள அஜ்மீர் தர்காவின் தலைவர் ஜைனுல் ஆபிதீன் அலி கான் தெரிவித்தார்.
 சூஃபி துறவி காஜா மொய்னுதீன் சிஸ்தியின் உர்ஸ் விழாவையொட்டி, அஜ்மீரில் பல்வேறு இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் அஜ்மீர் தர்காவின் தலைவர் ஜைனுல் ஆபிதீன் அலி கான் பேசியதாவது:
 மத ரீதியிலான எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. அயோத்தி வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணும் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன. இப்பிரச்னைக்கான தீர்வு, உச்ச நீதிமன்றத்திடமே உள்ளது. எனவே, உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை அனைத்து மதத் தலைவர்களும் மதிக்க வேண்டும்.
 இதுபோன்ற விவகாரங்களை அரசியலாக்குவதை, மத அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் நிறுத்திக் கொள்ள வேண்டும். மதவாத அரசியலுக்கு, இளைஞர்களை பலிகடா ஆக்கக் கூடாது.
 ஹிந்து மதத்தில் பெண்களை கடவுளின் அம்சமாக குறிப்பிடுகின்றனர். இஸ்லாம் மதத்திலும் பெண்களுக்கு சிறப்பிடம் உள்ளது. கிராமப் புறங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com