நாட்டில் அழியும் நிலையில் நக்ஸல் தீவிரவாதம்: ராஜ்நாத் சிங்

நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் அழியும் நிலையில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
நாட்டில் அழியும் நிலையில் நக்ஸல் தீவிரவாதம்: ராஜ்நாத் சிங்

நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் அழியும் நிலையில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
 சிஆர்பிஎஃப் படைப்பிரிவு உருவாக்கப்பட்டதன் 79ஆவது ஆண்டு தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, குருகிராமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
 நக்ஸல் தீவிரவாதம் மிகப்பெரிய சவாலாக விளங்கியது. ஆனால், நமது பாதுகாப்புப் படை வீரர்கள், சிஆர்பிஎஃப் வீரர்களின் துணிச்சலான நடவடிக்கைகளினால், நக்ஸல் தீவிரவாதம் தற்போது வெகுவாக குறைந்து விட்டது. இதற்கு முன்பு, நக்ஸலைட்டுகள் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள், பொது மக்கள் உயிரிழப்பு அதிகம் இருக்கும். தற்போதோ அந்நிலை மாறிவிட்டது. நக்ஸலைட்டுகள் தரப்பில்தான் அதிக அளவில் உயிரிழப்பு நேரிடுகிறது.
 நமது நாட்டில் இடதுசாரி தீவிரவாதம் அழியும் நிலைக்கு சென்றுவிட்டது.
 நக்ஸலைட்டுகள் ஏழைகளுக்கு, பழங்குடியினருக்கு, வளர்ச்சிக்கு விரோதமானவர்கள் என்பதை மக்கள் நன்றாக புரிந்து கொண்டு விட்டனர். சிஆர்பிஎஃப் படை வீரர்கள், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதி, வடகிழக்கு மாநிலங்கள் ஆகிய பகுதிகளில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கும், இடதுசாரி தீவிரவாதத்துக்கு எதிராகவும் தொடர்ந்து பன்முக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சிஆர்பிஎஃப் வீரர்களும், வீராங்கனைகளும், அப்பகுதி நிலவரம் மோசமடைந்த போதிலும், பொறுமையை மட்டும் அவர்கள் விட்டுவிடவில்லை. இதற்காக அவர்களை நான் பாராட்டுகிறேன்.
 உலகிலேயே இந்தியா பொருளாதார ரீதியில் மிகப்பெரும் சக்தியாக உருவெடுப்பதற்கு எந்த முட்டுக்கட்டைகளும் வராமல் சிஆர்பிஎஃப் உறுதி செய்ய வேண்டும்.
 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும், மத்திய ஆயுதப்படை போலீஸாருக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
 பாதுகாப்புப் படை வீரர்கள் தாங்கள் பணியில் ஈடுபட்டுள்ள பிரச்னைக்குரிய பகுதியில் வசிக்கும் அமைதியை விரும்பும் மக்களிடம், மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால், நமது நாட்டின் மீதும், அரசின் மீதும் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் என்றார் ராஜ்நாத் சிங்.
 பிரிட்டனின் காலனியாதிக்கத்தின்கீழ் இந்தியா இருந்தபோது, 3.18 லட்சம் வீரர்களுடன் கடந்த 1939ஆம் ஆண்டு சிஆர்பிஎஃப் படைப்பிரிவு உருவாக்கப்பட்டது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com