நீதித்துறை மீது கவனம் செலுத்தாமல் பொய்ப் புகார்களைக் கூறிவருகிறார்: ரவிசங்கருக்கு ராகுல் பதிலடி

நீதிபதிகள் பற்றாக்குறையால் கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டிய மத்திய சட்ட அமைச்சரோ,
நீதித்துறை மீது கவனம் செலுத்தாமல் பொய்ப் புகார்களைக் கூறிவருகிறார்: ரவிசங்கருக்கு ராகுல் பதிலடி

நீதிபதிகள் பற்றாக்குறையால் கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டிய மத்திய சட்ட அமைச்சரோ, அதைக் கண்டுகொள்ளாது அரசியல் எதிரிகள் மீது பொய்ப் புகார்களை முன்வைத்து வருகிறார் எனக் கூறியுள்ளார்.
 முகநூலில் தகவல்களைத் திருடியதாகச் சர்ச்சைக்குள்ளான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கும், காங்கிரஸுக்கும் தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல் இவ்வாறு கூறியுள்ளார்.
 கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் பிரசார நடவடிக்கைகளை பிரிட்டனைச் சேர்ந்த "கேம்பிரிட்ஜ் அனலிடிகா' என்ற நிறுவனம் மேற்கொண்டது. அப்போது லட்சக்கணக்கான முகநூல் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி, அதன் வாயிலாக அவர்களது விருப்பு, வெறுப்புகளை அறிந்து கொண்டு அதை டிரம்ப்புக்கு சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக் கொண்டதாக அந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
 இந்நிலையில், இதுதொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்த ரவிசங்கர் பிரசாத், காங்கிரஸ் கட்சிக்கும், கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்துக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறினார். அதை காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்தது. மேலும், பாஜகதான் அந்நிறுவனத்தை தேர்தலின்போது பயன்படுத்திக் கொண்டதாகத் தெரிவித்தது.
 இந்தச் சூழலில், ராகுல் காந்தி சுட்டுரையில் (டுவிட்டர்) அதுதொடர்பாக சனிக்கிழமை சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
 உச்ச நீதிமன்றத்தில் 55,000 வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 37 லட்சம் வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் 2.6 கோடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மேலும், ஆயிக்கணக்கான நீதிபதிகள் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டிய சட்டத் துறை அமைச்சரோ, அரசியல் எதிரிகள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில்தான் கவனம் செலுத்துகிறார் என்று அந்தப் பதிவில் ராகுல் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com