காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜகவுடன் அதிமுக 'மேட்ச் பிக்சிங்': காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு! 

காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜகவுடன் அதிமுக 'மேட்ச் பிக்சிங்' செய்து கொண்டு அவையை செயல்பட விடாமல் முடக்குவதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். 
காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜகவுடன் அதிமுக 'மேட்ச் பிக்சிங்': காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு! 

புதுதில்லி: காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜகவுடன் அதிமுக 'மேட்ச் பிக்சிங்' செய்து கொண்டு அவையை செயல்பட விடாமல் முடக்குவதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார் 

காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தை செய்லபட விடாமல் அதிமுக எம்.பிக்கள் தொடர்ந்து முடக்கி வருகிறாரகள். 15 நாட்களுக்கு மேலாக இதே நிலை நீடித்து வருகிறது. இதனிடையே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சியினரால் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத்  தீர்மானம் கொண்டு வரும் முயற்சி நிறைவேறாமல் போனது.

இந்நிலையில் காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜகவுடன் அதிமுக 'மேட்ச் பிக்சிங்' செய்து கொண்டு அவையை செயல்பட விடாமல் முடக்குவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாயன்று மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் முடிவு செய்தது. இது தொடர்பாக சபாநாயகர் சுமித்ரா மஹாஜனுக்கு முன்னரே கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சபை 10.30 மணிக்கு கூடியதும், நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் அதிமுக எம்.பிக்கள் மீண்டும் தொடர்ந்து அமளியில்  ஈடுபட்டனர்.

இதனால் கோபம் அடைந்த காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால், 'மத்திய அரசுக்கு ஆதரவாகவே அதிமுக இவ்வாறு செயல்படுகிறது என்றும், நமபிக்கை இல்லாத் தீர்மானத்தினை கொண்டு வர விடாமல் தடுக்கும் முயற்சி இது' என்றும் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.பிக்கள் கோஷம் எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும் பொழுது, 'நமபிக்கை இல்லாத் தீர்மானத்தினை தடுக்கும் பொருட்டு, நாடாளுமன்றத்தில் பாஜகவுடன் அதிமுக 'மேட்ச் பிக்சிங்' செய்து கொண்டு அவையைச் செயல்பட விடாமல் முடக்குகிறது என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.

இதன் காரணமாக அவை நண்பகல் 12 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறையில் காங்கிரஸ் மற்றும் அதிமுக உறுப்பினர்களிடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com