12-ஆம் வகுப்பு பொருளியல் மறு தேர்வு ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும்: சிபிஎஸ்இ அறிவிப்பு

12-ஆம் வகுப்பு பொருளியல் பாடத்துக்கான மறு தேர்வு ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும் என்றும் 10-ஆம் வகுப்பு மறு தேர்வு குறித்து 15 நாட்களில்
12-ஆம் வகுப்பு பொருளியல் மறு தேர்வு ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும்: சிபிஎஸ்இ அறிவிப்பு

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு கணித பாடம், 12-ஆம் வகுப்பு பொருளியல் பாடத்துக்கான வினாத்தாள், சமூகவலைதளங்களில் கசியவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து 10-ஆம் வகுப்பு கணித பாடம், 12-ஆம் வகுப்பு பொருளியல் பாடம் ஆகியவற்றுக்கு மறு தேர்வு நடத்தப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்தது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மறு தேர்வுகள் எவ்வித இடர்பாடுகளுமின்றி சுமூகமாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநிலை எனக்கு நன்கு புரிகிறது. இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும் அவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்வித்துறையில் உள்ள அனைத்து சமூக விரோத செயல்களையும் ஒழிப்பது மிகவும் சவாலாக உள்ளது என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக தில்லி புலனாய்வு காவல்துறை சிறப்பு புலனாய்வுப் படை அமைத்து தனித் தனியாக இரு வழக்குகள் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது ஜார்கண்ட் மாநிலம், சத்ரா சதார் பகுதியில் 6 மாணவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், 12-ஆம் வகுப்பு பொருளியல் பாடத்துக்கான மறு தேர்வு ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும் என்றும் 10-ஆம் வகுப்பு மறு தேர்வு குறித்து 15 நாட்களில் தெரிவிக்கப்படும் அப்படியென்றால் ஜூலை மாதத்தில் 10-ஆம் வகுப்பு கணித பாடத்துக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com