பெண் குழந்தைகளின் பெற்றோர்களே பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்குப் பொறுப்பு: அதிர வைத்த பாஜக எம்எல்ஏ 

பெண் குழந்தைகளின் பெற்றோர்களே பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்குப் பொறுப்பு என்று உத்தரபிரதேச மாநில பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெண் குழந்தைகளின் பெற்றோர்களே பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்குப் பொறுப்பு: அதிர வைத்த பாஜக எம்எல்ஏ 

கான்பூர்: பெண் குழந்தைகளின் பெற்றோர்களே பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்குப் பொறுப்பு என்று உத்தரபிரதேச மாநில பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பைரியா தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் சுரேந்தர் சிங். பாலியா மாவட்டத்தில், திங்களன்று நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கு பெற்ற அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டில் பெண் குழநதைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்துவிட்டதற்குப் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள்தான் பொறுப்பு. அவர்கள் பெண் குழந்தைகளை சுதந்திரமாக நடமாடவிடுவதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் நடக்கின்றன.

அக்குழநதைகளின் பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளை முறையாகப் பார்த்துக்கொள்ளாமல், கண்காணிக்காமல் விட்டுவிடுவதால்தான் இதுபோன்று நடக்கின்றன. ஒரு சிறுமிக்கோ அல்லது சிறுவனுக்கோ 15 வயது வந்துவிட்டால், அவர்களின் நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இது பெற்றோரின் கட்டாயக் கடமையாகும்.

ஆனால், அப்படிச் செய்யாமல், அவர்களைச் சுதந்திரமாக விட்டுவிடுகிறார்கள். இப்படிச் செய்வதால்தான் பலாத்கார சம்பவங்கள் நடக்கின்றன. அத்துடன் குழந்தைகள் செல்போன்களைப் அனுமதிக்க தரக்கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

முன்னதாக இவர்தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com