கோடை எதிரொலி: நாளொன்றுக்கு 21 லட்சம் 'பீர்' விற்பனை!

கோடை காலம் எதிரொலியாக மார்ச் மாதத்தில் மட்டும் நாளொன்றுக்கு 21 லட்சம் பீர் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாநில கலால் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
கோடை எதிரொலி: நாளொன்றுக்கு 21 லட்சம் 'பீர்' விற்பனை!

கோடை காலம் எதிரொலியாக மார்ச் மாதத்தில் மட்டும் நாளொன்றுக்கு 21 லட்சம் பீர் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாநில கலால் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கோடை காலங்களில் வெயில் காரணமாக அதிகளவிலான வெப்பநிலை தெலங்கானா மாநிலத்தில் ஏற்படுவது வாடிக்கை. அதிலும் குறிப்பாக அம்மாநில தலைநகர் ஹைதராபாத்தில் அதிகளவிலான வெப்பநிலை பதிவாகும்.

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் பீர் விற்பனை அதிகரித்துள்ளதாக அம்மாநில கலால் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

மாநிலம் முழுவதும் கோடை காலம் காரணமாக பீர் விற்பனை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக மார்ச் மாதத்தில் மட்டும் நாளொன்றுக்கு 21 லட்சம் பீர் விற்பனையாகியுள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் சுமார் 20 முதல் 21 லட்சம் பீர் தினமும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மார்ச் மாதத்தில் மட்டும் 53 லட்சம் கேஸ் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 52 லட்சம் கேஸ் பீர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இங்கு அதிகளவில் பீர் விற்பனையாவது இதுவே முதன்முறையாகும். 

கடந்த 2015-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் மாநிலம் முழுவதும் பீர் விற்பனை ஒவ்வொரு ஆண்டாக அதிகரித்து வருகிறது. மேலும் தெலங்கானாவில் அதிகளவில் விற்பனையாகும் மதுவகையில் பீர் முதலிடத்தில் உள்ளது. இன்னும் கோடை காலம் முடியாத சூழலில் பீர் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒரு கேஸில் 750 மில்லி லிட்டர் அளவு கொண்ட 12 பாட்டில் பீர் இருக்கும். இது மார்ச் மாதத்தில் மட்டும் 6.36 கோடி பாட்டில்கள் விற்பனையாகியுள்ளன. கோடை காலங்களில் கலால் துறையின் மொத்த வருவாயில் 50 சதவீதம் பீர் விற்பனையில் இருந்து கிடைப்பதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com