கழிவறையில் டீ கேன் எடுத்து சென்ற விவகாரம்: ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

ரயிலில் உள்ள கழிவறையில் டீ கேன் எடுத்துச் சென்ற விவகாரத்தில் அந்த ஒப்பந்ததாரருக்கு இந்திய ரயில்வே ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
கழிவறையில் டீ கேன் எடுத்து சென்ற விவகாரம்: ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

கடந்த ஒருவார காலமாக ரயிலில் உள்ள கழிவறையில் இருந்து டீ கேன் எடுத்துச் செல்வது போன்ற விடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. தெலங்கானா மாநிலம் செக்ந்தராபாத் ரயில் நிலையத்தில் சார்மினார் ரயிலில் கடந்த 2017, டிசம்பர் இந்த விடியோ பதிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதில், ரயிலில் உணவுப்பொருள் விற்பனையாளர்கள் இருவர் கழிவறையில் இருந்து டீ கேன்களை எடுத்துச் செல்வது போன்ற காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன. இதையடுத்து தென்னக ரயில்வே நிர்வாகத்தால் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபர்களில் ஒருவர் ரயில்வே ஒப்பந்ததாரர் பி.சிவபிரசாத்தின் ஊழியர் என்பது தெரியவந்தது. 

ரயிலின் கழிவறையில் உள்ள குழாயில் இருந்த தண்ணீர் நிரப்பப்படவில்லை எனவும், அந்த கேன்களில் மீதமிருந்த டீயை ஒரு கேனுக்கு மாற்றியதாகவும், ரயிலில் உள்ள கூட்ட நெரிசலைத் தவிர்க்கவே அதுபோன்று செய்ததாகவும் அந்த செயலுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், இதுபோன்ற தவறான செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை என்று ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அந்த ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com