ஜம்மு காஷ்மீரில் 4 தீவிரவாதிகள், தலைமறைவாக இருந்த 7 பேர் கைது

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய சோதனையில் 4 தீவிரவாதிகள் மற்றும் தலைமறைவாக
ஜம்மு காஷ்மீரில் 4 தீவிரவாதிகள், தலைமறைவாக இருந்த 7 பேர் கைது

பாராமுல்லா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய சோதனையில் 4 தீவிரவாதிகள் மற்றும் தலைமறைவாக இருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட மோதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராணுவத்தினரை நோக்கி, இளைஞர்கள் கல்வீசி தாக்கினர். அதைத் தொடர்ந்து இளைஞர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

வாழ வேண்டும் என்பதற்காக அல்லாஹ் நம்மை படைத்திருக்கிறார்; 18-19 வயதில் மரணத்தை தழுவுவதற்காக அல்ல. ஏழை இளைஞர்களின் கைகளில் கற்களும், துப்பாக்கிகளும் உள்ளன. மாநிலத்தில் தொடரும் வன்முறையால் அப்பாவி இளைஞர்கள் பலியாகின்றனர். இந்த வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நடுநிலையான வழிமுறையை மத்திய அரசு கண்டறிய வேண்டும். அதன் மூலம், மாநிலத்தில் இளைஞர்களும், போலீஸாரும், ராணுவத்தினரும் கொல்லப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

மாநிலத்தில் நிலவும் அரசியல் பிரச்னைகளுக்கு அரசியல் ரீதியில் தீர்வுகாணப்பட வேண்டும்.

இளைஞர்கள் தங்களது சக்தியை, கனவுகளை, விருப்பங்களை சமூகத்துக்காக அர்ப்பணிக்க வேண்டும். மாநிலத்தில் மக்களும், ஊடகங்களும், மாணவர்களும், பெற்றோரும் இதர தரப்பினரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முக்கியப் பங்காற்றி உதவ வேண்டும்.

பல்வேறு தரப்பினருடன் நடத்தப்படும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை மூலமாகவே, மாநிலத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறினார். 

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் பாராமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய சோதனையில் 4 தீவிரவாதிகள் மற்றும் தலைமறைவாக இருந்த 7 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com