நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கக் கோரும் வழக்குவிவகாரம்: எதிர்கட்சிகள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற
நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கக் கோரும் வழக்குவிவகாரம்: எதிர்கட்சிகள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

புதுதில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. 
 
உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரணைக்கு ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் கொண்டு வர அனுமதிக்குமாறு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் மனு அளித்தனர். 
ஆனால், அந்த மனுவை விசாரித்த வெங்கய்யா நாயுடு, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி மனுவை நிராகரித்தார்.

இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பிரதாப் சிங் பஜ்வா, அமீ ஹர்‌ஷத்ரே யாஜ்னிக் ஆகியோர் சார்பில், கட்சியின் மூத்த தலைவரும் பதவிநீக்க நோட்டீசில் கையெழுத்திட்ட எம்.பி.க்களில் ஒருவருமான கபில்சிபல் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நேற்று திங்கள்கிழமை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு இன்று 5 நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஏ.கே.கோயல் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காங்கிரஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கபில் சிபல், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு எப்படி உருவானது? என கேள்வி எழுப்பினார். கபில் சிபல் கேள்விக்கு நீதிபதிகள் பதில் அளிக்காததால் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார் கபில் சிபில். இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. 

தலைமை நீதிபதி பதவி நீக்க வழக்கு பற்றி கபில் சிபல் விளக்கம் அளிக்கையில், விசாரணை அமர்வு எப்படி உருவாக்கப்பட்டது என்பது தெரிய வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பெஞ்ச் நீதித்துறை மரபுபடி அமைக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com