கர்நாடகாவில் பறிமுதல் செய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் போலி அல்ல:  தேர்தல் ஆணையம் 

கர்நாடகாவில் புதனன்று பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள்  போலி அல்ல என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் பறிமுதல் செய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் போலி அல்ல:  தேர்தல் ஆணையம் 

பெங்களூரூ: கர்நாடகாவில் புதனன்று பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள்  போலி அல்ல என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கர்நாடக சட்டசபைக்கு வரும் 12-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பிரசாரம் வியாழன் மாலையுடன் நிறைவு பெற்றது. இதற்காக காங்கிரஸ், பாஜக மற்றும் இதர கட்சிகள் தீவிரமாக கடைசி நாள் பிரச்சாரம் செய்துள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் புதன் இரவு ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து கட்டு கட்டாக  வாக்காளர் அடையாள அட்டைகள்   பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து 24 மணி நேர விசாரணைக்கு மாநில தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்நிலையில் கர்நாடகாவில் புதனன்று பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள்  போலி அல்ல என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகளில் எதுவுமே போலியானது கிடையாது. எல்லா அடையாள அட்டையும் உண்மையானதுதான்.

மேலும் குறிப்பிட்ட வீட்டின் அறையில் இருந்து எந்தவிதமான மோசடியும் செய்யப்படவில்லை, தேர்தல் ஆணையத்தின் இணையதளம் ஹேக் செய்யப்படவும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த அடையாள அட்டை விவகாரத்திற்கு பின் பாஜக இருக்கிறது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது. ஆனால் அதனை பாஜக முற்றாக மறுத்தது. தற்பொழுது காங்கிரஸ் இது தொடர்பாக புதிய ஆதாரத்தை வெளியிட்டு உள்ளது. அதன்படி பாஜகவின் உறுப்பினர் மஞ்சுளா நஞ்சமரி என்பவர்தான் அந்த கட்டிடத்திற்கு உரிமையாளர் என்றும், அவர்தான் இந்த மோசடிக்கு காரணம் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. எனவே அவரை கைது செய்து தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது

ஆனால் அதனை மறுத்துள்ள பாஜக மஞ்சுளாவை யார் என்றே தெரியாது என்றும், அவர் எங்கள் கட்சியில் உறுப்பினர் இல்லை, எங்கள் கட்சியில் உள்ள யாருமே மஞ்சுளாவுடன் அரசியல் ரீதியாக தொடர்பில் இல்லை என்று கூறியுள்ளது.

தற்போது இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மஞ்சுளா மற்றும் அவரது மகன் ஸ்ரீதர் இருவரும், ''நாங்கள் இப்போதும் பாஜகவில்தான் இருக்கிறோம். எங்களுக்கு பாஜக கட்சியினரோடு நல்ல தொடர்பு இருக்கிறது. பாஜக உறுப்பினர்கள் ஏன் தற்பொழுது இப்படி எங்களை கைவிட்டார்கள் என்று தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com