மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் வன்முறை: விடியோ மற்றும் புகைப்படங்கள்

வாக்குப்பதிவின் போது திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது
மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் வன்முறை: விடியோ மற்றும் புகைப்படங்கள்

மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இது 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் அளித்துள்ள தகவலின்படி, 621 மாவட்ட கவுன்சில்கள், 6,157 பஞ்சாயத்து பிளாக்குகள், 20 மாவட்டங்களில் உள்ள 31,827 கிராம பஞ்சாயத்துகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. 

இதன் வாக்குப் பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காலை 11 மணி நிலவரப்படி 26.28 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், வாக்குப்பதிவின் போது திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சதான்பூரில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சில் 20 பேர் பலத்த காயமடைந்தனர்.

முரிசிதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இருந்து வாக்குச்சீட்டுகள் மற்றும் வாக்குப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டு அருகிலிருந்த குளங்களில் வீசப்பட்டுள்ளது. இதனால் அங்கு தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. 

பர்கானாஸ் மாவட்டத்தில் நடந்த வன்முறையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஆரிஃப் காசி சுட்டுக் கொல்லப்பட்டார். பிர்பாரா வாக்குச்சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களால் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 பத்திரிகையாளர்கள் படுகாயமைடந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com