கர்நாடகாவில் இன்று பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம்: மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

பெங்களூரு: கர்நாடக தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 
கர்நாடகாவில் இன்று பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம்: மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு சட்டப்பேரவை அமைந்துள்ளது. இதில், பாஜக தனிப்பெரும் கட்சியாக 104 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 78 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ், 37 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்தது.   

இதையடுத்து, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதால் தங்களை ஆட்சி கோர அழைக்குமாறு பாஜக ஆளுநரை சந்தித்து கோரியிருந்தது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதால் தங்களை ஆட்சி கோர அழைக்க இந்த கூட்டணியும் ஆளுநரை சந்தித்து முறையிட்டனர். 

இந்த விவகாரத்தில், ஆளுநர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று அனைவரும்  எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

இந்நிலையில், பாஜகவில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த  கூட்டத்தில் மத்திய அமைச்சர்களான ஜேபி நட்டா மற்றும் தர்மேந்திர பிரதான் பங்கேற்கவுள்ளனர். 

இந்த கூட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக எடியூரப்பா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. 

மத்திய அமைச்சர்கள் நேற்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு அவர்கள் பெங்களூருக்கு விரைந்தனர். கர்நாடகவில் ஆட்சி அமைப்பது தென் இந்தியாவுக்கான அடித்தளம் என்று பாஜக கருதி வருவதால், இந்த விவகாரத்தில் அவர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com